“கோட்டா பதவி விலகத்தயார்” - சபாநாயகர் தெரிவிப்பு! - Sri Lanka Muslim

“கோட்டா பதவி விலகத்தயார்” – சபாநாயகர் தெரிவிப்பு!

Contributors

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால், தாம் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் கட்சித் தலைமைக் கூட்டத்தில் தெரிவித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார் .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில் இன்று (20) கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதற்கமைய பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு ஒவ்வொரு கட்சிகளும் முயற்சித்து வந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்படத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team