கோத்தாவின் கொள்கைப்பிரகடனம் மக்களுக்கு பொருத்தமானதாக இல்லை : மாற்று கொள்கையை அமுல்படுத்த முன்வரவேண்டும் - தவராசா கலையரசன் எம்.பி..! - Sri Lanka Muslim

கோத்தாவின் கொள்கைப்பிரகடனம் மக்களுக்கு பொருத்தமானதாக இல்லை : மாற்று கொள்கையை அமுல்படுத்த முன்வரவேண்டும் – தவராசா கலையரசன் எம்.பி..!

Contributors

நூருல் ஹுதா உமர்

அரசாங்கம் விவசாயிகளின் விருப்பு வெறுப்புக்களை ஓரம் தள்ளிவிட்டு இந்த துறையில் பாண்டித்தியம் பெற்ற அதிகாரிகளின் ஆலோசனைகளையெல்லாம் கவனத்தில் கொள்ளாது செயற்படுகிறது. இயற்கை பசளைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று தனது கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி உறுதி கொண்டுள்ளார். இந்த விடயமானது விவசாயத்தை முற்றுமுழுதாக நாசமாக்கும் விடயமாக பார்க்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இன்று நாவிதன்வெளி பிரதேச சவளக்கடை பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொண்டு பேசும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மொத்த தேசிய உற்பத்தியில் 22 சதவீத பங்களிப்பை செய்யும் எங்களின் பிரதேசத்தில் சேதனைபசளை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். கடந்த காலங்களில் எமது பிரதேச விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார்கள். பல்வேறு நஷ்டங்களை அடைந்திருந்தாலும் சிறப்பாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுபீட்சத்தின் நோக்குத்திட்டத்தை முன்மொழிந்து மக்களை வறுமையின் பால் இந்த அரசாங்கத்தின் கொண்டு செல்கிறார்கள். வரத்திற்கு ஒரு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். விவசாயம் அடங்களாக எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக எறியுள்ளது. இதனை ஏற்க மக்கள் தயாரில்லை என்பதால் நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடக்கிறது. கோத்தாவின் கொள்கைப்பிரகடனம் மக்களுக்கு பொருத்தமானதாக இல்லை. எனவே மாற்று கொள்கையை அமுல்படுத்த முன்வரவேண்டும்.அரசுக்குள்ளும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் வந்துள்ளது.

விலைவாசியை கட்டுப்படுத்தி நாட்டு மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதுடன் இரசாயன பசளையை இறக்குமதி செய்துதர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team