கோலாகலமாக நடந்த பாராட்டு விழா - Sri Lanka Muslim
Contributors

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெறும் சச்சினுக்கு, மும்பையில் பிரமாண்டமான அளவில் பாராட்டு விழா நடந்தது.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர்(வயது 40), தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறார்.

இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கம்(எம்.சி.ஏ) சார்பில், சச்சினுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அணி வீரர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

விழாவில் மும்பையில் உள்ள கண்டிவ்லி மைதானத்துக்கு சச்சின் டெண்டுல்கர் ஜிம்கானா எனப் பெயர் சூட்டப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team