சங்ககாரவுக்கு சிலை - யாழ் பல்கலை நிர்வாகம் முற்றாக மறுப்பு! - Sri Lanka Muslim

சங்ககாரவுக்கு சிலை – யாழ் பல்கலை நிர்வாகம் முற்றாக மறுப்பு!

Contributors

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுவதற்காக குமார் சங்கக்காரவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் உட்பட நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவ்வாறான தகவலை முற்றாக மறுத்ததுடன் வளாகத்தினுள் சிலைகளை நிறுவுவதென்பது நீண்ட பொறிமுறைகளைக் கொண்டது. இது தொடர்பான அனுமதி எதனையும் வழங்கவில்லை என்றும் ஊடகங்களின் வாயிலாகவே இதனை தாம் அறிந்து கொண்டதாகவும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team