சச்சினிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டேன்: இர்பான் பதான் - Sri Lanka Muslim

சச்சினிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டேன்: இர்பான் பதான்

Contributors

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கரிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

அத்தோடுஇ தனது கிரிக்கெட் வாழ்வில் சச்சின் டென்டுல்கர் ஏராளமாக உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சச்சின் டென்டுல்கர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே இர்பான் பதான் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் சச்சின் டென்டுல்கர் ஏராளமாக உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பந்து வீசும் போதெல்லாம் எங்கேஇ எவ்வாறு பந்து வீச வேண்டும் போன்ற விபரங்களை சச்சின் டென்டுல்கர் தனக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பார் என இர்பான் தெரிவித்தார்.

சச்சின் டென்டுல்கரிடமிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட இர்பான் பதான்இ பந்துவீச்சு மாத்திரமல்லாது  துடுப்பாட்டம் பற்றியும் ஏராளமாகக் கற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வீரர்களின் அறையில் சச்சின் டென்டுல்கரை 9 வருடங்கள் அருகிலிருந்து அவதானித்ததாகக் குறிப்பிட்ட இர்பான் பதான்இ அவர் எவ்வாறு மைதானத்திற்கு வெளியே நடந்து கொள்கிறார் போன்ற விடயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் இர்பான் பதான் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team