சச்சினின் இறுதி டெஸ்ட் போட்டி மும்பையில் - Sri Lanka Muslim

சச்சினின் இறுதி டெஸ்ட் போட்டி மும்பையில்

Contributors

இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் போட்டியை தனது சொந்த இடமான மும்பையில் விளையாடவுள்ளார். மும்பை வன்கெடே மைதானத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளது.

இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இந்தத் தொடரின் முதலாவது போட்டி நவம்பர் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையும், இரண்டாவதும், இறுதியுமான போட்டி நவம்பர் 14 முதல் 18 வரையிலும் இடம்பெறத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இப்போட்டிகள் இடம்பெறும் மைதானங்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் சற்று முன்னர் எடுக்கப்பட்ட முடிவின் படி, இத்தொடரின் முதலாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும், இரண்டாவது போட்டி மும்பை வன்கெடே மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் சொந்த இடமான மும்பையில் இப்போட்டி இடம்பெறவுள்ளதால் இப்போட்டி தொடர்பாக அதிக எதிர்பார்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளன.
இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதோடு, அவர் இதுவரை 51 டெஸ்ட் சதங்கள், 67 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 15,837 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team