சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது ஏன் தெரியுமா? - Sri Lanka Muslim

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது ஏன் தெரியுமா?

Contributors

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பாக மதிய அரசு எந்த ஆணையும் வெளியிடாத நிலையில் விருது பெற சச்சினுக்கு தகுதி இல்லை என வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

தற்போதைய விதிகளின் படி கலை, இல்லகியம், அறிவியல் துறையை சார்ந்தவர்களுக்கே பாரத ரத்னா வழங்கப்பட்டு வருவதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்நிலையில் பாரத ரத்னா விருது தொடர்பாக 2011ம் ஆண்டில் திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய ஆணையை மத்திய அரசின் வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் படி எந்த துறையிலும் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி ரவிசந்திர பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது.

Web Design by Srilanka Muslims Web Team