
சச்சினுக்கு 9 நாடுகளில் தபால் தலை
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு இதுவரையிலும் 9 நாடுகளில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்(வயது 40), சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்து சாதித்தவர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு, கடந்த 14ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் மத்திய அரசு சார்பில் தபால்தலை வெளியிடப்பட்டது.
ஆனால் இதற்கு முன் பல நாடுகள் சச்சினுக்கு தபால்தலை வெளியிட்டுள்ள செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
உலக தபால்தலைகளை சேகரிக்கும் விஷயத்தில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற அரவிந்த் ஜெயின் என்பவர் இதை உறுதி செய்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த சச்சினை கௌரவிக்கும் வகையில், கடந்த 2008ல் ஸ்காட்லாந்து அரசு மூன்றுவித படங்களில் தபால்தலை வெளியிட்டது.
இவர் 12,429 ஓட்டங்கள் எடுத்த போது இங்கிலாந்து சார்பில் 2009ல் தபால்தலை வெளியானது.
இதே ஆண்டில் காங்கோவும் சச்சினுக்கு பெருமை தந்தது.
2011ல் இந்திய அணி உலக கிண்ணத்தை வென்ற போது செயின்ட்.வின்சென்ட் என்ற அரசும், கினியா-பிசாவு நாடுகளும் தபால்தலை வெளியிட்டன.
இதுதவிர டோகா குடியரசு சார்பில், சச்சின் மற்றும் கங்குலிக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.