சஜித் அணியிலிருந்து வெளியேறுகிறார் சம்பிக்க..! - Sri Lanka Muslim

சஜித் அணியிலிருந்து வெளியேறுகிறார் சம்பிக்க..!

Contributors

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு மாவட்ட தமது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுயாதீனமாக இயங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எரிசக்தி பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வங்கி, போக்குவரத்து, எரிவாயு, விவசாயம், சுகாதாரம் மற்றும் மருந்துப்பொருள் துறைகளில் எதிர்நோக்கப்படும் நெருக்கடி நிலைமைகள் குறித்து யோசனைகள் முன்மொழிவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அசாதாரண நிலை நிலவி வருவதாகவும், அதனை தீர்ப்பதற்கு அசாதாரணமான யோசனைகள் முன்மொழியப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team