சட்டவிரோதமாக சவுதியில் வேலைக்குச் செல்ல முயன்ற 13 பெண்கள் கைது - Sri Lanka Muslim

சட்டவிரோதமாக சவுதியில் வேலைக்குச் செல்ல முயன்ற 13 பெண்கள் கைது

Contributors

சட்டவிரோதமாக சவுதிக்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்ல முயன்ற 13 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விசாரணை பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த பெண்கள் சுற்றுலா விசாவில் சவுதி செல்வதாகக் கூறி வேலை வாய்ப்புத் தேடி செல்லவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாட்டு வேலைக்குச் செல்லத் தேவையான மகளிர் பயிற்சி, மருத்துவ பரிசோதனை அறிக்கை போன்ற ஆவணங்களை வழங்க இப்பெண்கள் தவறியுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட பெண்கள் கொழும்பு, கம்பஹா, கிரிந்திவெல, கிளிநொச்சி மற்றும் வெலிகந்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

குறித்த பெண்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team