சட்டவிரோதமாக தங்கியிருப்போரை வெளியேற்ற சவூதி அரசு நடவடிக்கை - Sri Lanka Muslim

சட்டவிரோதமாக தங்கியிருப்போரை வெளியேற்ற சவூதி அரசு நடவடிக்கை

Contributors

வீஸா காலம் முடிவடை ந்தும் சட்ட விரோதமாக நாட்டிற்குள் தங்கியிருப்பவர்கள் கடுமையான நோய்வாய்ப் பட்டிருந்தாலும் ஆபத்தான நிலையில் இருந்தாலும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையளிப்பதில் லையென சவூதி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையரை உடனடியாக இலங்கை தூதரகம் ஊடாக நாடு திரும்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொள்வதாக பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

 

 

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்பதால் வேலை வாய்ப்பு பணியகம் இலங்கைத் தூதரகம் ஊடாக பெருந்தொகை பணத்தை செலவு செய்து தனியார் ஆஸ்பத்திரிகளில் இலங்கையருக்கு சிகிச்சை பெற்றுக்கொடுத்துவந்தது.

 

 

எனினும், அரச ஆஸ்பத்திரி களைப் போன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் வீஸா காலம் முடிவடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில்லை என்ற முடிவையும் சவூதி அரசு எடுத்துள்ளதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

 

 

எனவே வீஸா காலம் முடிவடைந்தும் சவூதியில் தங்கியிருக்கும் இலங்கையர் உடனடியாக இலங்கைத் தூதரகத்துக்குச் சென்று நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறும் இலங்கையிலுள்ளவர்களும் சவூதியிலுள்ள தமது உறவினர்களுக்கு அறிவிக்குமாறும் மங்கள ரந்தெனிய கேட்டுக்கொண்டார். வீஸா காலம் முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியிருந்த 16 ஆயிரம் இலங்கையருள் 14 ஆயிரம் பேர் சவூதி அரசு அறிவித்த பொது மன்னிப்பு காலத்தினுள் இலங்கைக்கு திரும்பியிருந் தனர். எனினும் இரண்டாயிரம் பேர் நாடு திரும்பவில்லை.

 

 

சவூதி அரசு தற்போது அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி மேற்படி 2000 பேரும் பாதிக்கப்படலாம் என்பதாலேயே உடனடியாக நாடு திரும்புமாறு பணியகம் அறிவித்தல் விடுப்பதாகவும் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team