சட்ட விரோதமாக சவூதியில் தங்கியிருக்கும் 80 வீதமானவர்களுக்கு அடையாள அட்டை இல்லை - Sri Lanka Muslim

சட்ட விரோதமாக சவூதியில் தங்கியிருக்கும் 80 வீதமானவர்களுக்கு அடையாள அட்டை இல்லை

Contributors

-தமிழில் ஏ.எம் அல்பிஸ்-

சட்ட விரோதமாக சவூதியில் தங்கியிருக்கும் 80 வீதமானவர்களுக்கு அடையாள அட்டை இல்லை இல்லாமல் உள்ளதாக தெரிவிக்க்ப்படுகின்றது.

சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக  கைது செய்யப்பட்டவர்களில் அல்லது சரணடைந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்த ஆவணங்கள் எதுவும் வைத்திருக்க வில்லை என கடவுச்சீட்டு தணைக்களத்தின் பொது ஆணையாளர் தெரிவித்தார்.

சவூதியரேபியாவானது அரேபியா விமான ஆதரவுடன் தினசரி குறைந்தது 5500 பேர் அளவிலான சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு திணைக்களமானது ஆவணமற்ற தொழிலாளர்களை சவூதியில் போக்குவரத்தில் ஈடுபட பாரம் கொடுப்பதற்கு முன் அவர்களுடைய கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவர்களின் பெயர்களுடன் கணினியில் பதியப்படுகின்றது.

சவுதியரேபியா இதுவரை 60.000க்கு மேற்பட்ட சட்டவிரோத தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருப்பவரை வெளியேற்றுவதற்கு அவர்களின் ஆவணங்கள் பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது என கடவுச்சீட்டு காரியாலத்தின் தலைமை அதிபதி தெரிவித்தார்.

ஆவணமற்று தங்கியிருக்கும் எதியோப்பியர்களை வெளியேற்றுவதற்கு 110 விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகதாகவும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team