சந்திக்கு சந்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தி அரசியல் நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு உரிய கடமையல்ல - Sri Lanka Muslim

சந்திக்கு சந்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தி அரசியல் நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு உரிய கடமையல்ல

Contributors

பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என  கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம புத்தரகித்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் அரசியல் மற்றும் ஏனைய விடயங்களில் தலையீடு செய்வதனால் பௌத்த சாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அரசியல் செய்யும் தரப்பினர் இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு தர்ம உபதேசங்களை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியதே பௌத்த பிக்குகளின் கடமையாகும்.

பௌத்த மதம் தொடர்பில் உணர்வுடன் செயற்படும் பிக்குகளின் எண்ணிக்கை கிரமமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது. சந்திக்கு சந்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தி அரசியல் நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு உரிய கடமையல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே, அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.-TC

அதேவேளை நாட்டில் முறைகேடான முறையில் நடக்கும்,தவறாக  மக்களை வழிநடாத்தும் பெளத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ள  அஸ்கிரிய பீடாதிபதிபதிகள் நாட்டில் மிக மோசமான முறையில் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எதிராக விசத்தை கக்கும் பெளத்த தீவிரவாத பிக்குகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வைரவில்லை என விமர்சங்கள் முன்வைக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team