சந்திரிகா தலைமையில் புதிய கட்சி !

Read Time:57 Second

மிகவிரைவில் புதுக்கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அறிவிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதுபற்றி இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமார வெல்கம எம்.பி இந்த தகவலை உறுதி செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாடு திரும்பியதும் இந்த அறிவிப்பை வெளியிட காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சந்திரிகா அம்மையாரது மகன் விமுக்தியும் இலங்கை அரசியலில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Previous post ஜூலை 1, இரவு 10 மணி முதல் மருதமுனை முழுமையாக முடக்கப்படுகிறது..
Next post நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல