சந்திரிக்கா தலைமையில் கட்சி தலைவர்கள் சந்திப்பு..! - Sri Lanka Muslim

சந்திரிக்கா தலைமையில் கட்சி தலைவர்கள் சந்திப்பு..!

Contributors

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையிலிருந்து நாட்டை எவ்வாறு பாதுகாப்பது என கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள், புத்திஜீவிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நேற்று (11.04.2022) BMICH இல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் நிகழ்வு சந்திரிக்காவின் அழைப்பின் பெயரில் அவரின் தலைமையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் நாட்டில் தற்போது எழுந்துள்ள உள்நாட்டு, சர்வதேச பிரச்சினைகள் சம்மந்தமாகவும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது இவ்வாறான சவால்களுக்கு முகம்கொடுத்து எவ்வாறு நாட்டைப் பாதுகாப்பது என்று ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது. இவ் விடயம் சம்மந்தமாக தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு சந்திரிக்கா தலைமையில் ஒரு குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, சுசில் பிரேமஜயந்த, டி.யூ. குணசேகர, முன்னாள் அமைச்சர் கருஜயசூரிய, அநுரஞாப்பா, குமார வெல்கம போன்றோர் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team