சனத் ஜயசூரியாவின் இரண்டாவது திருமண வாழ்வும் அம்போ! - Sri Lanka Muslim

சனத் ஜயசூரியாவின் இரண்டாவது திருமண வாழ்வும் அம்போ!

Contributors

பிரபல கிரிக்கட் வீரரும், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரியாவிடமிருந்து மணவிலக்கு பெற்றுத் தருமாறு ஜயசூரியாவின் மனைவியும், மூன்று பிள்ளைகளின் தாயுமான சான்றா டானியா ரோஸ்மரி டி சில்வா நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகளுக்கு உரிமையாளரான பிரதிவாதி, தனக்கும் தனது மூன்று பிள்ளைகளுக்கும் ரூபா 800 மில்லியன் நட்ட ஈடும், அவர்களின் பயன்பாட்டுக்கு இரண்டு வாகனங்களும் வழங்குமாறும் கட்டளையிடுமாறு அவர் நீதி மன்றத்தைக் கோரியுள்ளார். அத்துடன் தான் இருக்கும் வீட்டைத் திருத்திக் கொடுக்குமாறு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சனத் ஜயசூரியாவின் மூன்று பிள்ளைகளின் தாயாரான சான்றா டானிய அவரின் இரண்டாவது மனைவியாவார். முதலாவது மனைவி திருமணமான சில மாதங்களிலேயே மணவிலக்கு பெற்றுச் சென்றது தெரிந்ததே.(inet)

Web Design by Srilanka Muslims Web Team