"சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா"எழுதிய ஹிந்து பத்திரிக்கையாளருக்கு பதிலடி: - Sri Lanka Muslim

“சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா”எழுதிய ஹிந்து பத்திரிக்கையாளருக்கு பதிலடி:

Contributors
author image

அபூஷேக் முஹம்மத்

1.இந்த கட்டுரை ஒரு கதை சொல்வது போல தொடங்குகின்றது …
அதில் சவுதி அரேபிய நாட்டின் புவியியல் மற்றும் பண்பாட்டிற்கு
தொடர்பு இல்லாத விடயமாக கதையை ஜோடிக்கின்றது.

 

2.பிறகு சவுதி நாட்டின் அன்றாட வாழ்க்கை சூழலை சொல்லுவது போல இஸ்லாமிய பண்பாட்டிற்கு எதிராக தன் வன்மத்தை தீர்க்கின்றது .

 

3.இஸ்லாமிய நாடுகளும், அங்குள்ள மக்களும் உலக மீடியா சித்தரிக்கும் தீவிரவாதங்களுக்கு ஒத்துழைப்பது போல செய்திகள் தொடருகின்றன ..

 

4.நேர்மறையாக சில செய்திகளை சொல்லுவது போல இருந்ததாலும் எதிர்மறையான எண்ணத்தை இஸ்லாமியர்கள் மீதும் இஸ்லாமிய பண்பாட்டின் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நூதன எழுத்து முயற்சி இது .

 

5.நீங்கள் சுற்றி சுற்றி எழுதும் இந்த எழுத்து மாயாஜாலத்தில் பெண்களுக்கு சமத்துவம் இல்லை என்ற கருத்தும், அமெரிக்க கோபுர தாக்குதலில் சவுதி அரேபியாவிற்கு தொடர்பு உண்டு .சவுதி அரசாங்க குடுமபத்தினர் சிலர் நிதி உதவி செய்துள்ளார் என்று நீளுகின்றது .

 

6.இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியது முஸ்லிம்களா ?அமெரிக்கர்களா ?என்ற விவாததிற்கு விடை இன்னும் கிடைக்காமல் இருக்கின்றது

 

7.இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை பற்றி உங்களிடம் பேச நாங்கள் தயார் . எங்களை அழைக்க நீங்கள் தயாரா ? என் அருமை தமிழ் ஹிந்து பத்திரிக்கையாளர்களே..

 

8.நீங்கள் எழுதும் வித்தையை அவிழ்க்கும் வல்லமை நடுநிலை எழுத்தாளர்களுக்கும் உண்டு என்பதனை நினைவில் வைத்து சமூகத்தில் நஞ்சை விதைக்கும் காரியத்தை விட்டு விட்டு நல்ல விடயங்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள்

 

9.தொடரும் புளுகு மூட்டைகளை கவனிப்போம் ..தொடர்ந்து அவர்கள் வினாக்களுக்கு பதில் தருவோம் .

Web Design by Srilanka Muslims Web Team