சமுர்த்தி உதவி பெறுவோர் தொகை குறைக்கப்பட்டாலும் கொடுப்பனவுகள் 3518 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு - Sri Lanka Muslim

சமுர்த்தி உதவி பெறுவோர் தொகை குறைக்கப்பட்டாலும் கொடுப்பனவுகள் 3518 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

Contributors

சமுர்த்தி உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 16,594 இலிருந்து 14 இலட்சத்து 76,607 ஆக குறைக்கப்பட்டாலும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் 3518 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை சமுர்த்தி உதவி பெறுவோரின் பொருளாதாரம் மேம்பட்டதனாலேயே இவ்வாறு குறைக்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தினால் பாராளுமன் றத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரை ஒவ்வொன்றையும் பின்பற்றியே திவிநெகும திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

சிலர் இதனை பிழையாக விளங்கிக்கொண்டிருக்கி றார்கள். சிலர் நாம் உச்ச நீதிமன்றத்தி னால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை புறந்தள்ளிவிட்டே திட்டத்தை நடை முறைப்படுத்தியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மையில்லை என்றும் அமைச்சர் பசில் தெரிவித்தார்.

திவிநெகும திணைக்களம் 2014 ஜன வரி 1ம் திகதி முதல் இயங்க ஆரம் பிக்கிறது என்றும் அமைச்சர் பசில் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச் சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட அவர் நேற்று பாராளுமன்றத்தில் மேற்கண்ட வாறு தெரிவித்தார். எமது நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் எழுச்சி பெற வேண்டும். பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஜனாதிபதி திவிநெகும திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

கிராமப்புற, தோட்டப்புற, நகரில் மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். கிராமப்புறத்திலிருக்கும் மக்களின் குடும்ப வருவாயை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் திவிநெகும திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மனைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதும் இதன் நோக்கமாகும்.

வ்வொரு வீட்டிலும் சுய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 10 பேர்ச்சஸ் முதல் 20 பேர்ச்சஸ் காணிகளைக் கொண்ட 22,903 காணிகள், 20 – 10 பேர்ச்சர்ஸ் உடைய 44,936 காணிகள், 40 பேர்ச்சர்ஸ் கொண்ட 32,059 காணிகள் இன்று மனைப் பொருளாதார திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

திவிநெகும திட்டத்தின் ஊடாக வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை மூலம் காய்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன. கறிவேப்பிலை, இஞ்சி, ரம்பை போன்றன ஒவ்வொரு வீடுகளிலும் செய்கை பண்ணப்பட்டது. ஆனால் இன்று இவற்றை சுப்பர் மார்க்கட்டுகளில் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. திவிநெகும திட்டத்தின் ஊடாக இந்த நிலை மாறி வருகிறது.

2012 ஐ விட 2013 இல் காங்கறிகளின் விலை குறைந்துள்ளது. வர்த்தக ரீதியாக ஏற்றுமதி காய்கறி செய்கையில் ஈடுபடுபவர்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உரமானியமும் வழங்கப் படுகிறது.

இதேபோன்று பால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பசும்பால் குடிப்பதை ஊக்குவித்து வருகிறோம். முன்பு பாடசாலைகளில் கட்டாயமாக பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை மாணவர்கள் குடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியிருந்தார்கள். மறுத்தால் பெற்றோரிடமிருந்து கடிதம் கொண்டுவர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டது. இவ்வாறு தான் இந்த நாட்டில் பால்மா பாவனையை கொண்டு வந்தார்கள். பசும்பால் குடித்தால் சளித்தொல்லை ஏற்படும் என அச்சுறுத்தினார்கள். இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக ‘பசும் பால்’ நல்லது என வைத்தியர்கள் இப்போது பரிந்துரை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். மீன்பிடித்துறையிலும் இன்று நாடு மிகவும் முன்னேறி வருகிறது. மீனவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் இந்த அரசு செய்து வருகிறது. இலங்கையில் புடவைக் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டிருந்தது. அது முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது. கைத்தறி முதல் புடைவைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. திவிநெகும திட்டத்தின் ஊடாக கைத்தறி நெசவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக ஒரு மனிதனை மேம்படுத்தினாலும் அவரை எமது பாரம்பரிய கலை, கலாசார, சமய, பண்பாடுகள் உள்ளவராக உருவாக்க வேண்டும். இதற்கான அடிப்படை திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் திட்டங்கள், நீர்ப்பாசன திட்டங்கள், வீதிகள், கட்டடம், உட்கட்டமைப்பு வசதிகள்என சகல துறைகள் தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. தாய், சேய் நல நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பு மர நிழல்களில் இயங்கிய தாய், சேய் நிலையங்கள், இன்று நவீன கட்டடங்களுக்குள் இயங்குகின்றன.

ஜனாதிபதிக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அவரைச் சந்திக்க வரும் பாடசாலை மாணவர்களுடன் உரையாட அவர் தவறுவதில்லை. பாடசாலைகளில் கழிப்பறைகள் இல்லை, மலசல கூட வசதிகள் இல்லை என்ற குறைபாட்டையே மாணவர்கள் கூறிவருகின்றனர். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி சகல அரச பாடசாலைகளிலும் மலசல கூட வசதிகள் ஆண் / பெண் என தனித்தனியாக அமைக்க நிதி ஒதுக்கியுள்ளார்.

இதேபோன்று கிராமங்களில் ஓடைகள், ஆறுகளை ஊடறுத்துச் செல்லும் சிறிய பாலங்கள், தொங்கு பாலங்கள், மரப்பாலங்கள் என்பவற்றை அகற்றி நவீன முறையில் பாலங்கள் கட்டவும் 2014 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தினூடாக நிதியை ஜனாதிபதி வழங்கியிருக்கிறார்.

இது நாட்டில் சகல பகுதிகளிலும் சுமார் 4138.17 கிலோ மீற்றர் வீதி முழுமையாக காபர்ட் செய்யப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 2011 ஆம் ஆண்டு வரை கார்பட் செய்யப்பட்டதை விட இது மூன்று மடங்காகும். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு கிராமம் ஒரு வேலைத்திட்டம் என்ற கிராமிய அபிவிருத்தி திட்டத்துக்காக ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாகாண எழுச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகிறது.

இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எத்தனை கப்பல்கள் வருகின்றன என கேட்கிறார்கள். அப்படி கேட்க வேண்டாம். இது எதிர்கால சந்ததியினருக்காக செய்த முதலீடு. மற்றுமொரு துறைமுகம் வேண்டும், விமான நிலையம் வேண்டும் என டட்லி சேனாநாயக்கவும் எண்ணினார். ரணில் விக்கிரமசிங்க அடிக்கல்லே நாட்டினார். ஆனால் எந்த தலைவராலும் துணிச்சலாக முன்னெடுக்க முடியாமல் போனது. வினாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இதனை செய்து முடிக்க இயலுமானது.

அதிவேக நெடுஞ்சாலை, துறைமுகம், விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் என்பன நாட்டின் எதிர்காலத்துக்கு, எதிர்கால சந்ததியினருக்கு, மக்களுக்கு செய்யப்பட்ட முதலீடு என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 30 வருடங்கள் நாம் பின்னோக்கி சென்றுள்ளோம். எம்மை விட உலக நாடுகள் எவ்வளவு முன்னணியில் நிற்கின்றன என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஏனைய நாடுகள் முன்னேறிச் சென்றுள்ள இடத்தை நாம் எட்ட வேண்டும். பொருளாதார அபிவிருத்தி என்பது இன்றைக்கு மட்டும் தேவையான தொன்றல்ல. நீண்டகால தேவையை கருத்திற் கொண்டு செய்யப்பட வேண்டும் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team