சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு! - Sri Lanka Muslim

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

Contributors

மாணவர்கள் கல்வியின் மூலம் சரியான இலக்கை அடைய வறுமை நிலை காரணமாக அமையக் கூடாது என்ற காரணத்தினால், சமுர்த்தி திணைக்களமானது புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள, சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் உயர்தர மாணவர்களுக்கான (2021-2023) ‘சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு’ வழங்கும் நிகழ்வும், சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு பெற்று பல்கலைக்கழகத்திற்க்கு தகுதி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பும், கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர். எம்.சாலிஹ் தலைமையில், நேற்று முன்தினம் பிற்பகல் (07) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் மேலும் இங்கு உரையாற்றுகையில்,

சமுர்த்தி திட்டத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பதாகும். அவ்வாறு இருக்கும்போது நீங்கள் சிந்திக்கலாம். வறுமையை ஒழிப்பதற்க்கு ஏன் புலமை பரிசில் வழங்க வேண்டுமென்று புலமைபரிசில் வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்ய முடியும். இதன் மூலம் குடும்பம் தலை நிமிர்ந்து வாழ முடியும்.
ஆரம்பத்தில் நானும் கல்முனை பிரதேச செயலாளரும் சமுர்த்தி குடும்பத்திலிருந்து இந்த உயர் பதவிகளுக்கு வந்தவர்கள் தான்.

அதே போன்று ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் தான் பிற்காலத்தில் உலகில் தலை சிறந்த விஞ்ஞானியாகவும் இந்தியாவின் ஜனாதிபதியானார்.
கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுந்தர் பிச்சை சாதரண குடும்ப தொழிலாளியின் மகனாவார். இப்படி இவர்கள் கல்வின் முலம் தலை நிமிர்ந்து வாழ முடியுமானால் உங்களுக்குக்கும் அது ஏன் முடியாத விடயமா?

கல்வியை என் நிலையிலும் மாணவர்கள் விட்டு விடக் கூடாது. கல்வி என்பது எமது மூலதனம் இங்கு உள்ள மாணவர்கள் அனைவரும் நாளை சமூகத்தில் உயர் நிலையை அடைய வேண்டும். நாம் இருக்கும் கதிரையில் எதிர்காலத்தில் மாணவராகிய நீங்கள் முன்னனால் அமர்ந்து அலங்கரிக்க வேண்டும்.

சிங்கப்பூர் தலைசிறந்த நடாக மாறுவதற்கு பிரதான காரணம் கல்வியாகும். ஒரு காலத்தில் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விடயமாக பணம், வளங்கள் கச்சா எண்ணெய் போன்ற சில பொருட்கள் காணப்பட்டது ஆனால் இனி வரும் காலங்களில் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விடயமாக கல்வியறிவு மாறவுள்ள நிலை காணப்படுகின்றது பொதுவாக எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளும் முக்கியத்துவமளிக் கும் மூலதனமாக கல்வியறிவு காணப்படுகின்றது
இதேபோன்று எமது வறுமையான குடும்பத்தில் மூலதனமாக கல்வியறிவு இருக்க வேண்டும் நாமும் சமுகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப கல்வியறிவு மிகவும் அவசியமாகும். கல்வியின் மூலமே குடும்பம் தலை நிமிர்ந்து வாழ வைக்கும். உலக நாட்டுடன் எமது நாட்டை உலகின் தலை சிறந்த நாடாக மாற்ற வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.

மேலும் மாணவர்கள் மொழி அறிவினை விருத்தி செய்வது அவசியமானதாகும். அதேபோல் எமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் இதன் மூலம் நாம் முன்னேற்றமடைந்து கொள்ள முடியும். நாம் உயரத்தில் கல்வி கற்கும் போது கல்வி கற்க்கும் துறையில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் வறுமையை காரணமாக வைத்து கல்வியை கைவிடக் கூடாது. இதற்காய் வெட்கப்படவும் கூடாது வாழ்வில் கஷ்ட்டம் வருவது வழமை தான் ஆனால் அது வாழ்வில் தொடர்ச்சியானதாக இருக்காது என்பதை நினைவூட்டுகிறேன். எதிர்காலத்தில் மாணவர்கள் நீங்கள் எல்லோரும் சமூகத்தில் முக்கிய துறைகளில் பங்காற்றும் வழிகாட்டியாக வர வேண்டும் என்றார் .

நிகழ்வின் விசேட அம்சமாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு பெற்ற மாணவர்கள் இருவர் அண்மையில் வெளியாகிய கல்வி பொது தர உயர் தர பெறுபெற்றின் படி பல்கலைக் கழகத்திற்க்கு தகுதியடைந்த கல்முனை சமுர்த்தி வங்கி வலயத்திலிருந்து மருத்துவ பீடத்துக்கு தகுதி பெற்ற மாணவி எஸ்.டி.எப்.சஜியா, மருதமுனை சமுர்த்தி வங்கி வலயத்திலிருந்து பொறியியல் பீடத்துக்கு தெரிவான அல்மனார் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) மாணவன் எம்.என்.இன்சாப் ரஜாயி ஆகியோர் இதன்போது கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team