சமூகத்தின் பற்றுக் கொண்டவர்களாக அரசியல் வாதிகள் இருக்க வேண்டும்- அமைச்சர் றிசாத் நீர்கொழும்பில் தெரிவிப்பு - Sri Lanka Muslim

சமூகத்தின் பற்றுக் கொண்டவர்களாக அரசியல் வாதிகள் இருக்க வேண்டும்- அமைச்சர் றிசாத் நீர்கொழும்பில் தெரிவிப்பு

Contributors

 

இர்ஷாத் றஹ்மத்துல்லா-

இளம் புதிய  அரசியல் தலைமைத்துவங்களை உருவாக்குவதன் மூலம்,சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் ஆளுமைக் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள்.அவர்களது இந்த முற்போக்கு சிந்தணையும் கட்சியின் நெறிப்படுத்தலும் தொடர்ந்தேச்சையாக வழங்கப்படுவது தேவையானது என்று என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடக்கு,கிழக்குக்கு வெளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாகவும் கூறினார்.

தொழிலதிபரும்,கம்பஹா மாவட்டத்தின் அகில இலங்ககை மக்கள் காங்கிரஸின் பிரதான அமைப்பாளருமான எம்.சிராஸ் தலைமையில் நீர்கொழும்பில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் பிரதி தேசிய அமைப்பபாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரும்,கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான எம்.எஸ்.சுபைர்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட கம்பஹா மாவட்ட பிரதேச சபைகளின் பிரதி நிதிகளும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது –

எமது கட்சியின் உருவாக்கமானது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தினது எதிர்காலம் குறித்து நீண்ட கவனத்தை செலுத்தும் ஒன்றாகும்.இதில் மக்களது உரிமை,தேவைப்பாடுகள்,அபிவிருத்திகள் என்று பல பிரிவுகளை கொண்டு அதனை முன்னெடுத்துவருகின்றோம்.வடக்கு,கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை அழிக்க முற்பட்ட சக்திகளை எதிர்கொண்டு அதிலிருந்து அம்மக்களை பாதுகாக்கும் வகையில் எமது கட்சியின் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

மத்திய அரசில் 3 பாராளுமன்றப் பிரதி நிதித்துவமும்,அதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு,பிரதி அமைச்சு மற்றும்பாராளுமன்ற பிரதி நிதித்துவமும் காணப்படுகின்றது.அதே போல் கிழக்கு மாகாண சபையிலும் 3 உறுப்பினர்கள் உள்ளதுடன்,வடமாகாண சபையிலும 3 உறுப்பினர்களை எம்மால் பெற முடிந்துள்ளது.அது போக பல பிரதேச சபைகளின் தலைமைத்துவம்,கிண்ணியா நகர சபையின் தலைமைத்துவம் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள் சகோதர உறுப்பினர்களையும் எமது கட்சி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

இந்த பதவிகளை வைத்துக் கொண்டு தான் நாம் ஆளும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு எமது பலத்தை காண்பித்து அனைத்து மக்களுக்கும் எம்மால் ஆன அனைதது பணிகளையும் செய்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் நாட்டி சில வேண்டத்தகாத சம்பவங்கள் இனவாதிகளால் ஏற்படுத்தப்படுகின்ற போது,அதற்கு எதிராக பேச வேண்டிய இடத்தில் நாங்கள் பேசியுள்ளோம்.பேசியும் வருகின்றறோம்.

அண்மைய கால பல சம்பங்களை தொடர்பில் எமது நிலைப்பாடுகளை நாம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.எமக்கு அரசியல் நிகழ்ச்சி நிரலை விட சமூகத்தின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.தேவையற்ற தரணங்களில் பொருப்பற் முடிவுகளை நாம் எடுப்பதன் மூலம் இந்த சமூகத்தின் எதிர்காலத்தினை சூன்யமாக ஆக்கிவிட முடியாது.வெறும் மேடைப்பேச்சுக்களும்,சந்திப் பேச்சுக்களுமு் எமது சமூகத்தின் விமோசனத்திற்கு ஒரு போதும் தீர்வை தராது என்பதை நான் தெளிவாக கூறி வைக்கவிரும்புகின்றேன்.

முஸ்லிம்களது பள்ளவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்  சம்பவங்களின் போதெல்லாம் நாங்கள் பாராளுமன்றத்திலும்,அமைச்சரவையிலும்,உரிய தரப்புக்களுடன் அது குறித்து கடும் வாதங்களை செய்து எமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.சிலர் கூறுகின்றனர் இவ்வாறான சம்பவங்களின் போது அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு,இது எந்தளவில் யதார்த்தமானது என்பதை அவர்கள் மறுபரிசீலனை  செய்ய வேண்டும்.அவ்வாறு நாம் வெளியேறி ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் முஸ்லிம் பிரதி நிதிகள் இருப்பது போன்று வெறும் அறிக்கைகளுக்குள் மட்டும் சோரம் போனவர்களாகவா ? இருக்கச் சொல்கின்றீ்ர்கள் என்று கேட்க விரும்புகின்றேன்.

 

எமது கட்சியினை பொருத்த வரையில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் எமது அனைத்து பணிகளும் சமூகத்தின் விமோசனத்திற்காக மட்டும் இருக்க வேண்டும் என்ற துாய எண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

 

உங்களுக்கு தெரிந்திருக்கும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள வெளியேற்றப்பட்டு அவர்கள் வாழ்ந்த மண்ணில்மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற போது அதற்கு எதராக கடும் பிரயத்தனங்கள் செய்யப்படுகின்றது.அதே போல் தான் எமது மக்களின் முன்னேற்றம் தொடர்பில் தடைகளும்,சதிகளும் இடம் பெற்றுவருகின்றன.

 

கம்பஹா மாவட்டத்தில் 75 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.இங்கிருக்கின்ற பாடசாலை தொடர்பில் பல தேவைகள் இருக்கின்றன.அவற்றை பெற்றுக் கொள்வதில் தாமதங்கள் காணப்படுகின்றன என ஆதங்கத்தை நீங்கள் முன் வைத்தீரகள்,அதற்கான பதிலை நாங்கள் தான் வழங்க வேண்டும்.

சுயநலமற்ற  சமூகத்தின் மேம்பாடுகளுக்காக பேசக் கூடிய எமக்கான அரசியல் தலைமைகள் உருவாகும் போது இதனை வெற்றிக் கொள்வதில் பல சாத்தியப்பாடுகள் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்விடயம் தொடர்பில் எமது சமூகத்தினை தெளிவுபடுத்த வேண்டும்.யதார்தததை எடுத்துரைக்க வேண்டும். என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

 

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

Web Design by Srilanka Muslims Web Team