சமூகத் துரோகிகள் எப்போது தியாகிகள் ஆனார்கள்!! - Sri Lanka Muslim

சமூகத் துரோகிகள் எப்போது தியாகிகள் ஆனார்கள்!!

Contributors
author image

Editorial Team

கௌரவ தாபித் அவரிடம் அவர் செய்த வரலாற்று துரோகத்தை நியாயப்படுத்தும் சுயநலவாதிகளிடமும் சில கேள்விகள்!!

ஒரு தேசியக் கட்சியில் உங்கள் முகவரியைப் பெற்றுக் கொண்ட நீங்கள் தேசிய மட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அணுகி அதற்கான தீர்வுகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும்.

மாறாக, நீங்கள் ஒரு சுயேட்சை கட்சியில் வரவில்லை என்பதை மறந்து விட வேண்டாம் நீங்கள் சுயேட்சை கட்சியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு வந்திருந்தாள் உங்களுக்கு மட்டும் சேவைகளையும் அபிவிருத்திகளையும் செய்யலாம் “தாவித்” அவர்களே உங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது உங்கள் ஊர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களும் சேர்ந்து தான் உங்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி இருக்கிறார்கள்.

ஆகவே, நீங்கள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் அதனை மறந்து தன் ஊர் மட்டும் இருந்தால் போதும் அதற்கு மட்டும் தான் நான் குரல் கொடுப்பேன் என்று உங்கள் பச்சோந்தி தனமான செயல்பாட்டில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வதை நியாயப் படுத்த உங்களுக்கு கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நியாயப்படுத்தலாம் மாறாக என்னால் உங்களை ஒரு காலமும் நியாயப்படுத்தவோ உங்களுடைய இந்த துரோகத்தை மறக்கவோ மன்னிக்கவோ என்னால் முடியாது!

இந்த துரோகிகள் எப்போது பிராயச்சித்தம் “தவ்பா” செய்தார்கள் அவ்வாறு “தவ்பா” செய்த பிற்பாடு அந்த துரோகிகளோடு இருக்க முடியாது துரோகிகளிடம் இருந்துகொண்டு இவர்கள் செய்தார்கள் என்று சொன்னாள் அல்லாஹ் ஒருகாலும் இவர்களின் தௌவ்பாவை ஏற்றுக்கொள்ள மாட்டான்! இவ்வாறு இருக்கும் போது இந்த முகநூல் முப்த்திகள் இந்த துரோகிகளை எவ்வாறு வாழ்த்தி புகழ்ந்து பாராட்டுகிறார்கள்?

இஸ்லாமிய வரலாற்றில் சரித்திரங்களில் அநியாயக்காரனுடன் கொடுங்கோலனுடன் இணங்கி போங்கள் அவனுடன் சேர்ந்து போங்கள் அவனுக்கு ஆதரவு வழங்குங்கள் என்று எங்கேயாவது ஒரு குர்ஆன் வசனம் ஹதீஸும் இருப்பதாக உங்களால் நிரூபித்துக் காட்ட முடியுமா? இந்தக் கேள்வியை அநியாயக்காரனுடன் இருக்கவேண்டும் என்று சொல்லி முகநூல் முப்த்திகள் பொய்யை மெய்யென்றும், மெய்யை பொய்யான சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றவர்களிடம் கேட்கின்றேன்?

தேர்தல் காலத்தில் கோட்டாபயோடு சேர்வது மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சேர்வது எல்லாம் முனாஃபிக்குகள் என்று ஃபத்வா கொடுத்து கிண்டல் அடித்த நீங்கள் இன்று கோத்தபாய உடன் மஹிந்த ராஜபக்ஷ உடன் உல்லாசமாக உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டு முனாபிக் தனமான வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்போது நீங்கள் கோத்தாபயோடு சேர்ந்திருந்தால் முனாபிக்காக மாறி விட்டீர்களா? அன்று சேர்ந்த முஸ்லிம்களை முனாஃபிக்குகளாக பத்துவா கொடுத்து விட்டு நீங்கள் இன்று செய்வது என்ன?

அரசியல் முகவரி இல்லாத உங்களுக்கு முகவரி தந்த ரிசாத் பதியுதீன் சிறை சென்று நூத்தி எழுபத்தி இரண்டு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது எப்போதாவது ஒரு நாள் அந்த சிறைக்கு போய் பார்த்திருக்கின்றீர்களா? அல்லது அவருடைய விடுதலைக்காக நீங்கள் முயற்சி ஏதும் செய்திருக்கிறீர்களா? விடுதலையானதும் அவரைப் போய் சந்தித்து இருக்கின்றீர்களா? இவ்வாறான முனாபிக் தனமான வேலைகளை செய்து கொண்டிருக்கின்ற உங்களை தியாகியாகவும் வீரர்ராகவும் கூலிப்படைகள் கூவுகின்றார்கள்!

ஏப்ரல் 21க்கு பிறகு ஏராளமான முஸ்லீம்கள் சிறைவாசம் இருக்கின்றார்கள் இவர்களின் விடுதலைக்காக நீங்கள் செய்த முயற்சி என்ன இவர்களை எப்போதாவது ஒருதடவை சிறைக்குச் சென்று பார்த்திருக்கின்றீர்களா? அல்லது அவர்களின் குடும்பத்திடம் போய் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி இருக்கின்றீர்களா இல்லை இவ்வாறு இருக்கும்போது உங்கள் கூலிப்படைகள் நீங்கள் ஒரு மாவீரன் நெப்போலியனைப் போன்று புகழ்கின்றார்கள்!!

சதா 24 மணித்தியாலமும் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வீரன் ஆசாத் சாலிக்கு இன்று 266 ஆவது நாளாக சிறையில் அடைக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்டு இருக்கின்றார் இவ்வாறன ஒரு தியாகியை நீங்கள் எப்போதாவது பாராளுமன்றத்தில் இவருக்காக குரல் கொடுத்து இருக்கின்றீர்களா? இவரின் விடுதலைக்காக ஏதாவது முயற்சிகள் செய்து இருக்கின்றீர்களா? இவரின் விடுதலையை சர்வதேச மயப்படுத்தப்பட்டு இருக்கின்றீர்களா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை இப்படிப்பட்ட உங்களுக்கு இன்று உங்களின் கூலிப்படைகள் தியாகியாக வருணிக்கின்றார்கள்!

தோர்தல்காலத்தில் வாய் கூசாமல் பிரதேசவாத வெறியுடன் மாற்று பிரதேச எதிரணியினருக்கு பொத்துவில் மக்கள் வாக்களிப்பது உங்களின் பெண்களை கூட்டி கொடுப்பதற்கு சமம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈனப் பிரச்சாரத்தை நடத்திநீர்கள் இதனை அறியாத கூலிகள் உங்களை பாராட்டுகிறார்கள்!!

கொடுங்கோலர்கள் இருபது நாள் குழந்தையை எரித்து மூன்று நாள் முடிவதற்குள் அலரி மாளிகைக்குள் அந்த பச்சிளம் குழந்தை எரித்த வாடை மாறுவதற்குள் விருந்துபசாரத்தில் பங்கேற்று அந்த குழந்தையை எரித்த மாமிசத்தை புசித்தது போல் நீங்களும் புசித்து உங்களை நியாயப்படுத்துகின்றன பச்சோந்திகளுக்கும் புசிக்கக் கொடுத்தாப் போல் விருந்துபசாரத்தில் களைகட்டி மஹிழ்ந்தீர்கள் இதனை மூடிமறைத்து இன்று நீங்கள் சமூகத்துக்கு ஒரு தியாகியாகவும் ஒரு மாவீரனாக உங்களை முகநூல் ஊடாக மனச்சாட்சியை தொலைத்துவிட்டு பிரச்சாரம் செய்கின்றார்கள்!!

இருபதற்கு கை உயர்த்திருந்தபோது இந்த சமூகத்துக்காக நீங்கள் முன்வைத்த டிமான் கோரிக்கை ஏதும் வைத்தீர்களா என்று பார்த்தால் எதுவிதமான கோரிக்கைகளையும் வைக்காமல் உங்களுடைய பொக்கட்டுகளை நிரப்புவதற்கான அந்த அண்ட டேபிள் டீலிங் செய்ததை மூடி மறைப்பதற்காக உங்களால் ஏவப்பட்ட முகநூல் கூலிப்படைகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

போர்ட் சிட்டிக்கு ஆதரவு வழங்குகின்ற போது இந்த சமூகத்துக்காக ஏதாவது டிமான் கோரிக்கை முன்வைத்தீர்கள் என்றால் அதிலேயும் சமூகத்துக்கான எந்தவித தீர்வையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை உங்களுடைய பொக்கட்டுகளை நிரப்புவதற்கான அண்ட டேபிள் டீலிங் முன் வைத்தீர்கள் இதனை மூடிமறைத்து இன்று நீங்கள் ஒரு தியாகியாக எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் உங்களை புகழ்ந்து வாழ்த்தி எழுதுகிறார்கள் எதற்காக?

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீங்கள் பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்கி இருந்தீர்களே அந்த நேரம் இந்த சமூகத்துக்காக ஏதாவது டிமான் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றீர்கள் என்றால் எதுவுமே இல்லை உங்களுடைய சுயலாபத்துக்காக உங்களின் பொக்கட்டை நிரப்புவதற்கு அண்ட டேபிள் டீலிங் பண்ணுகிறீர்களே சமூகத்துக்கு எந்த விதமான பிரச்சினைகளையும் தீர்வுகளையும் முன்வைத்து நீங்கள் அவசரகால சட்டத்திற்கு ஆதரவு வழங்கினீர்கள் என்றால் இல்லவே இல்லை இதனை மூடி மறைப்பதற்காக முகநூல் குஞ்சு மூளைகளை வைத்து கொக்கரிக்கின்றீர்கள்

முஸ்லிம்களின் அடிப்படை உரிமை ஆகிய ஜனாஸாக்களை மதவெறி யுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் 380 ஜனாஸாக்களை எரித்த போது இதற்கான தீர்வை பெறுவதற்கு நீங்கள் எடுத்த முயற்சிதான் என்ன? மாறாக உங்களுடைய பொக்கட்டுகளை நிரப்பி அதன் ஊடாக ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் கூலிக்கு மாரடிக்கும் முகநூல் கூலிப்படைகளை வைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவது இதைத்தவிர இந்த சமூகத்துக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை இதனை மூடி மறைப்பதற்காக மனசாட்சியை அடகு வைத்த முகநூல் விற்பனையாளர்கள் மொத்த வியாபாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்

முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் கைவைத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முஸ்லிம்களுக்கு எதிரான இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள் இதற்கு எதிராக உங்களுடைய எதிர்ப்பு என்ன? தீர்வு என்ன என்று இந்த அரசாங்கத்திற்கு ஏதாவது முன் வைத்தீர்கள் என்றால் எதுவுமே இல்லை மாறாக உங்களுடைய சுகபோகங்களையும் உங்களுடைய அல்லாக்கைகளையும் சந்தோஷப் படுத்துவதற்காக அப்பப்ப அவருகளுடைய கணக்குகளில் வரவுகள் வைக்கப்படுகின்றன உண்மைக்குப் புறம்பாக அமானிதத்துக்கு எதிராக முகநூலில் இன்று பிரச்சாரத்தை தொடுத்திருக்கின்றார்கள் இந்த கூலி முகநூல் போராளிகள்!

ஆயிரம் மதரஸாக்களை இல்லாமல் ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன
இந்த கொடுங்கோல் ஆட்சியினரின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்கின்ற நீங்கள் இதனைத் தடுப்பதற்காக உங்களுடைய முயற்சி தான் என்ன? உங்களுடைய இதற்கான தீர்வுதான் என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை இதனை நியாயப்படுத்த முகநூல் கூலிகளை வைத்து கூவுகின்றீர்கள்!!

முஸ்லிம் மாணவர்களின் பாடவிதான த்திலிருந்து முஸ்லிம்களின் வரலாறுகள் எல்லாம் அழிக்கப்பட்டு இஸ்லாமிய சரித்திரங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பாடவிதானமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன இதற்கான உங்களுடைய தீர்வுதான் என்ன உங்களுடைய எதிர்ப்புதான் என்ன?

ஆயிரம் மதரசாக்கள் என்பது குர்ஆன் மதரசாக்கள் இதனை ஓதுவதற்கு தடை கொண்டு வருகின்றார்கள் என்றால் நம்முடைய அடிப்படை உரிமையில் கை வைக்கின்றார்கள் அல்லவா இதனை தடுப்பதற்கு உங்களுடைய முயற்சி தான் என்ன?

அரபு நாடுகளிடம் இருந்து கையேந்தி பிச்சை எடுக்கலாம் ஆனால் அரபு மொழியில் எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை வைக்க முடியாது!

அல்லாஹ்வின் வீட்டில் அல்லாஹ்வை முன்னிறுத்தி பண்ணிய சத்தியத்திற்கு நீங்கள் துணியாவிலும் பதில் சொல்லியே ஆகவேண்டும் மறுமையிலும் பதில் சொல்லியே ஆகவேண்டும் இது ஒன்றும் கேலிக்கூத்தான விடயம் இல்லை என்பதை நீங்களும் உணர்ந்து உங்களுக்காக கூவுகின்ற கூலிகளும் உணர வேண்டிய காலம் வெகுதூரமில்லை!!

முஸ்லிம்கள் அணியும் ஆடை ஆகிய புர்காவை தடை செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது இதற்கான தீர்வுதான் என்ன உங்களின் எதிர்ப்புதான் என்ன?

மிருக வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து முஸ்லிம்கள் உணவுக்காக பயன்படுத்துகின்ற மாட்டிறைச்சி அறுப்பதற்கு தடை கொண்டு வருகின்றார்கள் இதற்கான மாற்று யோசனை தான் என்ன இதற்கான எதிர்ப்பு தான் என்ன, தீர்வுதான் என்ன?

2022க்கான வரவு செலவுக்கு ஆதரவை வழங்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றீர்கள் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் எந்தவிதமான நன்மையும் இல்லை என்று மக்கள் கவலையுடன் இருக்கின்ற போது 20க்கு கை தூக்கிய சமூகத் துரோகிகளுக்கு மட்டும் இந்த வரவு செலவுத் திட்டம் நியாயமாக தென்படுகின்றன!!

எவர் தூற்றினாலும் -போற்றினாலும் – சமூக மாற்றத்துக்கான என்னுடைய போராட்டம் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

“சமூக அக்கறையுள்ள” பௌஸ்.

விதைத்துக் கொண்டே இருப்பேன்!
முளைத்தால் மரம்! இல்லையென்றால் உரம்!

Web Design by Srilanka Muslims Web Team