சமூக சேவையாளர் தாஸிமின் மறைவு குறித்து ரிஷாட் அனுதாபம்!! - Sri Lanka Muslim

சமூக சேவையாளர் தாஸிமின் மறைவு குறித்து ரிஷாட் அனுதாபம்!!

Contributors
author image

ஊடகப்பிரிவு

மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ யின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.பி.சி.தாஸிம் அவர்கள் கனடாவில் காலமான செய்தி வருத்தமளிக்கின்றது. அவரது மறைவு, சமுதாயத்துக்கு பேரிழப்பாகும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை வெளியிட்டுள்ளார்.

அனுதாப அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மலாய் இனத்தைச் சேர்ந்த தாஸிம், தனது வாழ்வின் பெரும்பகுதியை சமூக சேவையிலேயே கழித்தவர். இலங்கையில் வை.எம்.எம்.ஏ என்ற நிறுவனம் பரந்துபட்ட சேவைகளை வழங்குவதற்கு மர்ஹூம் தாஸிமின் பங்களிப்பு அபரிமிதமானது.

மாளிகாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வை.எம்.எம்.ஏ கட்டிடமும், அதனை அண்டிய வரவேற்பு மண்டபமும் எஸ்.பி.எஸ்.தாஸிமின் முயற்சியினாலாகும்.

முன்னாள் வங்கியாளரான தாஸிம், வெளிநாடுகள் பலவற்றில் தொழில் புரிந்தவர். மறைந்த தலைவர்களான எம்.எச்.முஹம்மத், ஏ.எச்.எம்.அஸ்வர், மசூர் மௌலான ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹூம் எஸ்.பி.சி.ஹலால்தீன், மர்ஹூம் தாஸிமின் சகோதரர் ஆவார்.
அன்னாரின் ஈடேற்றத்துக்காக பிரார்த்திப்போம்.

thasim ymma

Web Design by Srilanka Muslims Web Team