சம்மாந்துறையில் அரசுக்கு எதிராக ஜே. வி.பியினர் போராட்டம்..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் அரசுக்கு எதிராக ஜே. வி.பியினர் போராட்டம்..!

Contributors

நூருள் ஹுதா உமர்.

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளன ஏற்பாட்டில் சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் அரசிக்கெதிரான கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று காலை மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எஸ்.எம். புஹாரி மற்றும் சம்மாந்துறை அகில இலங்கை விவசாயிகள் அமைப்பின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளருமான வை.பி.எம் நபாஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

விவசாயிகளுக்கான உரம் , கிருமிநாசினி கோருவதுடன் விவசாயக் காணிகள் அபகரிப்பிற்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றத்துடன் அரசின் போக்குகளை கண்டித்த கோஷங்களும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாரை மாவட்ட அகில இலங்கை விவசாயிகள் அமைப்பின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த பியதிஸ்ஸ, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான், சம்மாந்துறைப் பிரதேச விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team