சரத் பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு » Sri Lanka Muslim

சரத் பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Contributors

 

qout20

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சார கூட்டங்களை நடாத்த உள்ளுராட்சி மன்றங்கள் அனுமதியளிப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய கட்சிகளுக்கு இடமளித்த போதிலும், ஜனநாயகக் கட்சிக்கு இடமளிக்கப்பட மாட்டாது என உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் நேரடியாகவே தெரிவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நிலவி வருவதாகவும், ஜனநாயகத்திற்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.(GTN)

Web Design by Srilanka Muslims Web Team