சர்ச்சைக்குரிய கிரெக் சாப்பல், இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர். - Sri Lanka Muslim

சர்ச்சைக்குரிய கிரெக் சாப்பல், இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர்.

Contributors

சர்ச்சைக்குரிய கிரெக் சாப்பல், இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரெக் சாப்பல், 65. கடந்த 2005 மே முதல் 2007 ஏப்., வரை, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் தான் இந்திய அணி 2007 <உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) முதல் சுற்றுடன் திரும்பியது.

தவிர, கேப்டன் கங்குலி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என, வெளிப்படையாக தெரிவித்து, டிராவிட்டுக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்தார். தவிர, கங்குலியை அணியில் இருந்து நீக்க காரணமாக இருந்தார்.

இவரது பயிற்சி காலத்தில், ஒருவித நெருக்கடியுடன் அணியில் இருந்ததாக சேவக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் தெரிவித்தனர். இப்போது, இவர் இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இவருடன், ஆஸ்திரேலியாவின் ஷேன் டப், மைக்கேல் ஓ சுல்லிவனும் போட்டியில் உள்ளனர். தவிர, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், லால்சந்த் ராஜ்புத், மோகித் சோனியும் பயிற்சியாளர் தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team