சர்வகட்சி செயற்பாடுகளுக்கு மக்கள் காங்கிரஸ் ஒத்துழைக்க தயார் - ஜனாதிபதியுடன் வெள்ளி சந்திப்பு! - Sri Lanka Muslim

சர்வகட்சி செயற்பாடுகளுக்கு மக்கள் காங்கிரஸ் ஒத்துழைக்க தயார் – ஜனாதிபதியுடன் வெள்ளி சந்திப்பு!

Contributors

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை வரவேற்பதாகவும் சர்வ கட்சி செயற்பாடுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி தனது கொள்கை திட்டத்தை நாட்டுக்கு முன் வைத்தார். அவரின் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவற்றை நிறைவேற்றினால் நாட்டுக்கு நல்லதாகவே அமையும். கட்சி என்ற ரீதியில் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்.

அமைச்சுப் பதவிகளை நாம் கேட்பது தொடர்பில் எந்தப் பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. சர்வகட்சி செயற்திட்டத்திற்கு ஒத்துழைக்க கோரி அவர் எமக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு உடன்பாடு தெரிவித்து நாம் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறோம். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாம் ஜனாதிபதியை சந்திக்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team