சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு ஒன் அரைவல் முறையில் வீசா! - Sri Lanka Muslim

சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு ஒன் அரைவல் முறையில் வீசா!

Contributors

சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு ஒன் அரைவல் முறையில் வீசா வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ள சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு ஒன் அரைவல் முறையில் வீசா வழங்கப்பட உள்ளது.
இணைய அல்லது தூதுவராலயங்களின் ஊடாக வீசா பெற்றுக்கொள்ள முடியாமல் போன ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு ஒன் அரைவல் முறையில் வீசா வழங்கப்பட உள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் லண்டன் செயலகத்தினால் ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ்வாறு ஒன் அரைவல் மூலம் வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என ஊடக அமைச்சின் செயலளார் சரிதா ஹேரத் தெரிவித்துள்ளார்.
300 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் அமர்வுகள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, இணைய தளத்தை உருவாக்குதவற்கு 15 மில்லியன் ரூபா செலவானதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team