சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்கள் கைது - Sri Lanka Muslim

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்கள் கைது

Contributors

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் உட்பட சம்மேளனத்தின் இரண்டு உறுப்பினர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுதந்திர ஊடக இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறையில் கல்நதுகொண்டபோதே சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் வந்து செயலமர்வை நடத்தினர் எனக்கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

குறித்த செயமலர்வு ஜானகி ஹோட்டேலில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் 10 பேர் வந்து இந்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகளையும் கைது செய்துள்ளனர்.இவர்கள் இருவரும் அதிதிகளாகவே இந்த செயலமர்வில் கலந்துகொண்டதாக சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.-tm

Web Design by Srilanka Muslims Web Team