சர்வதேச கால்பந்து போட்டியில் நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த செளதி அரேபியா - Sri Lanka Muslim

சர்வதேச கால்பந்து போட்டியில் நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த செளதி அரேபியா

Contributors
author image

BBC

செளதி அரேபியாவில் உள்ள ஜெடாவில் சர்வதேச கால்பந்து போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடந்த திட்டமிடப்பட்ட சதியை முறியடித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செளதி அரேபியாவின் தேசிய அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் கார் குண்டு ஒன்றை வைக்க சதி செய்யப்பட்டதாக செளதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், போலிஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிடப்பட்ட இரண்டாவது சதியையும் முறியடித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை சிரியாவில் உள்ள ஐ.எஸ் குழுவின் தலைவர் ஒருவர் வழிநடத்தியதாகவும் செளதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இரு சதித்திட்டங்கள் தொடர்பாக பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில், செளதி பிரஜைகள் உள்பட சிரியாவை சேர்ந்த ஒருவரும், இரு பாகிஸ்தானியர்களும் அடங்குவார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team