சவாலுக்கு தயார்: ஜாகீர் கான் - Sri Lanka Muslim
Contributors

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் சவாலுக்கு தயார் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

இதற்கான டெஸ்ட் அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின், ஜாகீர்கான் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மீண்டும் அணிக்கு திரும்பியது உற்சாகமாக உள்ளது.

சவாலை சந்திக்கத் தயாராகி விட்டேன், சவால்களை சந்திப்பதும் அதை எதிர்கொள்வதும் சுவாரஸ்யமானது.

கடந்த காலங்களில் தென் ஆப்ரிக்காவில் பசுமையான நினைவுகளைப் பெற்றுள்ளேன்.

இதற்கு முன்பும், அங்கு போட்டி நடந்த போது தான் மீண்டும் அணியில் இடம்பிடித்தேன்.

எனவே, தென் ஆப்ரிக்க பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

அணியில் இடம் கிடைக்காமல் இருந்தபோது அணிக்குத் திரும்ப முடியுமா, முடியாதா என யோசித்தேன்.

மனதளவில் தயாராக இருந்த நான், உடலளவில் தயாராவதற்கு பயிற்சியாளர்களிடம் ஆலோசித்தேன்.

அவர்களுடன் இணைந்து ஆலோசித்து திட்டங்கள் வகுத்து செயல்பட்டேன்.

பொதுவாக இளம் வீரர்களுக்கு ஆலோசனை தரும் குணம் இயற்கையாக என்னிடம் உள்ளது.

இதற்காக நான் தயங்குவதில்லை, ஏனெனில் இந்திய துணைக்கண்டத்தில் வேகப்பந்து வீச்சாளாராக நீடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் அவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team