சவுதிக்கான விசிட் விசா 06 மாதங்கள் மட்டுமே - Sri Lanka Muslim

சவுதிக்கான விசிட் விசா 06 மாதங்கள் மட்டுமே

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவுக்குள் ‘விசிட் வீசா’ முறையில் விண்ணப்பிப்போருக்கு ஆகக்கூடிய காலமாக 6 மாத அனுமதி வழங்கப்படும் என்பதாக சவுதி அரேபியாவின் கடவுச்சீட்டு திணைக்களம் உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.

 

“இதன் மூலம் சவுதிக்குள் விசிட் வீஸா மூலமாக தனியாகவோ அல்லது குடும்பத்தினருடனோ வெளிநாட்டடினர் விண்ணப்பிக்கும் நடை முறை இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி விமான நிலைய மற்றும் எல்லைகளிலுள்ள கடவுச்சீட்டு கட்டுப்பாட்டு உத்தியோக கணனியில் விசிட் வீஸா விண்ணப்பதாரிகளின் தரவுகள் பதிவேற்றப்படும்” என்பதாக சவுதி கடவுச்சீட்டு கட்டுப்பாட்டு அதிகாரி அகமட் பின் பஹத் தெரிவிக்கிறார்.

 

6 மாதங்கள் அதாவது 180 நாட்களுக்கே இவ்வனுமதி வழங்கப்படும் எனவும் பஹத் மேலும் தெரிவித்தார்.(KI)

Web Design by Srilanka Muslims Web Team