சவுதிக்கு வேலைக்கு வந்து வீடு திரும்ப முடியாமல் தவிர்க்கும் சகோதரரின் கதறல் - Sri Lanka Muslim

சவுதிக்கு வேலைக்கு வந்து வீடு திரும்ப முடியாமல் தவிர்க்கும் சகோதரரின் கதறல்

Contributors
author image

முஹம்மட் ஜெலீல் (நிந்தவூர்)

நான் குடும்ப வறுமை காரணமாக சவூதி அரேபியாவுக்கு சட்டபூர்வமாக வேலை வாய்ப்பு பெற்று 2012ம் ஆண்டு “தம்மாம்” நகருக்கு வந்தடைந்தேன் அங்கிருந்து எனது கபில் (BOSS) “ஜுபைல்” எனும் கபீலின் சொந்த இடத்துக்கு வேலைக்காக அழைத்துச் சென்றார் அங்கு சில மாதங்கள் என்னை பணியமர்த்தினார் பின்னர் சில மாதங்கள் கழிந்து நஜ்றான்” எனும் இடத்துக்கு அழைத்துச்சென்று அங்கு ஒரு வேலையில் விட்டுவிட்ட போன கபில் தான் இதுவரைக்கும் அவரோடு தொடர்புகொள்ள  முடியவில்லை அப்படியோ காலங்கள் கழிய ஆண்டுகள் இரண்டாகிவிட்டது.   

 

நான் இங்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும் இதுவரை காலமும் எனக்கு வெளிநாட்டு வேலையாட்களுக்கான ஆள் அடையாள அட்டை (இக்காமா) பெற்றுத்தராமேலே என்னை பணிக்கமர்த்தினார் நான் வந்த ஆரம்ப காலத்தில் எனது அனுமது ஆள் அடையாள அட்டை (இக்காமா) எடுத்துத்தரும்படி பல முறை வாதாடினேன் ஆனான் எனது கபில்” அவர் காதில் வாங்கிக்கொள்ளவேயிலை அத்தோடு எனது ஒரு வருட கால சம்பளமும் தரவுவில்லை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது ஒரு சகோதரர்மூலம் இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கம் கிடைக்கப்பெற்றேன் அத் தொலைபேசி இலக்கமூடாக இங்குள்ள இலங்கை தூதரகத்தை தொடர்புகொண்டு பேசியபோது அங்குள்ளவர்கள் வேறு ஒரு தொலைபேசி இலக்கத்தினை தந்து அவ் இலக்கம் தான் உங்களின் முறைப்பாடிற்கான தொலைபேசி இலக்கம் அவர்களோடு பேசி

 

உங்கள் முறைப்பாட்டை பதிவு செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள் உடனே அவ் இலக்கத்திற்கு தொடர்புகொண்டபோது அங்கு வேறு ஒருவர் இன்னும் வேறு ஒரு தொலைபேசி இலக்கத்தினை தந்து அவ் இலக்கத்தில் பேசி உங்கள் முறைப்பாட்டை பதிவு செய்துகொள்ளுங்கள் என்று திரும்பவும்  கூறினார் இதே போன்று நான்கு தடவைகள் நான்குவிதமான தொலைபேசி இலக்கத்தினை என்னிடம் தந்த நமது இலங்கை தூதரகத்தினர்கள் என்னை அங்கும் இங்கும் அலைய வெய்த்தார்கள் அவர்கள் கொடுத்த தொலைபேசி இலக்கங்கள் இதோ (011 4195267 / 0114608240 / 0503605447 / 0503605448 ) இவ் இலக்கத்தில் கடைசியாக உள்ள நபரை நான் தொடர்புகொள்ளும் போதெல்லாம் அவர் கூறுவார் ஏதோ மீட்டிங்கில் (Meeting) ல் இருப்பதாக கூறுவார் இதுபோன்று பலதடவை நான் தொடர்புகொண்ட போதெல்லாம் அவர் அவ்வாறு “மீட்டிங்(meeting)  என்றே கூறினார் .

 

வேலை நேரத்தில் தொடர்புகொள்ளும் போதெல்லாம் மீட்டிங்” என்றே கூறுகின்றார் எனும் போது அவரின் கையடக்க தொபேசிக்கு மாலை நேரத்தில் தொடர்புகொண்டபோது ஏன் மாலை நேரம் “கோல்” ( Call) எடுக்கின்றீர்கள் என்று ஓங்கிய குரலில் என்னிடம் கேட்டார் அதற்கு நான் கூறினேன் ஐயா” உங்களுக்கு கோல் (call) எடுக்கும் போதெல்லாம் நீங்கள் மீட்டிங்” என்றே கூறுகின்றீர்கள் அதனால் தான் மாலை நேரம் தொடர்புகொண்டேன் என கூறியபோது. அதற்கு அவர் கூறினார் நான் தவறான முறையில் சவூதிக்கு வேலைக்காக வந்திருக்கலாம் அதனால்தான் உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்றெல்லாம் கண்டமாதரியெல்லாம் என்னை பேசினார் அக் கடமைக்கு சொந்தக்காரர்.

 

நான் உண்மையில் தவறான முறையில் இங்கு வேலைக்காக வரவில்லை தவறான கபிலிடம்தான் வந்துதான் மாடிக்கொண்டேன் தற்போது என்னை அவர் எமாற்றிவிட்டு எங்குதான் இருக்கின்ராரோ தெரியவில்லை நான் பலதடவை எனது கபிலின் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அத் தொலைபேசி தற்போது பாவனையில் இல்லையென்றே கூறுகின்றது.

 

இங்கு என்னால் நேரில் சென்று முறைப்பாடு செய்யமுடியாதபோது இலங்கையில் உள்ள  எனது உறவினர்களிடம் இது தொடர்பாக அறிவித்தபோது அவர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று என் பிரச்னை தொடர்பாக முறைப்பாடு செய்தனர் அங்கு எனது உறவினர்களிடம் முறைப்பாட்டுக்கான ஒரு இலக்கம் வழங்கப்பட்டது இதுவே அந்த இலக்கம் CN 2131311, இவ் இலக்கத்தை தந்து உங்கள் பிரச்னையை விசாரணை செய்வதற்கு நாங்களே உங்களை அழைப்போம் தொடர்புகொன்று பேசுவோம் என்றெல்லாம் சொன்னார்கள் தற்போது இவ் இலக்கம் என் உறவினர்களிடம் வழங்கிப்பட்டு ஒரு வருட காலம் கழிந்தும் இதுவரைக்கும் இலங்கை தூதரகத்தால் எந்தவொரு அழைப்புவிடுக்கவுமில்லை   .


மேலும் இது தொடர்பாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு நானாக நேரில் சென்று இதற்குரிய தீர்வை பெறலாமென நினைக்கும்போது நான் தற்போதிருக்கும் இடம் “நஜ்ரான்” எனும் இடத்திலிருந்து  ஜித்தா” இலங்கை தூதரகத்துக்கு செல்வதாயின் 2000,ம் கிலோ மைல் தூரம் செல்லவேண்டும்  தற்போது நிலவும்  சவூதி அரேபிய கடும் சட்டதிட்டங்களினால்  என்னிடம் கடவுசீட்டோ இகாமா” எதுவும் இல்லாத போது வெளியில் சென்று இதற்குரிய தீர்வை பெற முடியாமல் தவிக்கின்றேன் இதற்கு என்னதான் வழி………? படைத்தவன் கையில்….  

 

இதை படிக்கின்ற சகோதரர்களே இறைவன் இதற்கொரு நல் வழியை காட்டிட உங்கள் பிராத்தனைகளை எனக்காக இணைத்துக்கொவீராக.
மேலும் இதை படிப்பதோடு மட்டுமின்றி ஏனைய சகோதரர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள் இதுபோன்ற நிலை வேறு ஒருத்தருக்கு நடை பெறாதிருக்க வாய்ப்புக்கள் உண்டாகட்டும்.

 

இதோ பாதிக்கப்பட்ட நான் எனது தொலைபேசி இலக்கம்:# 00966 535609284 

Web Design by Srilanka Muslims Web Team