சவுதியின் புதிய மன்னராக இளவரசர் சல்மான் - Sri Lanka Muslim

சவுதியின் புதிய மன்னராக இளவரசர் சல்மான்

Contributors
author image

Junaid M. Fahath

நீண்ட காலமாக சவுதி அரேபியாவின்
ஆட்சி பீடத்தில் இருந்து 90 வயதான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ்
இன்று வெள்ளிக்கிழமை காலமானர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 

அவருக்குப் பதிலாக சவுதியின் புதிய
மன்னராக இளவரசர் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

2005ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து, சவுதி அரேபியாவை கட்டுக் கோப்பாக
வைத்திருந்த மன்னர் அப்துல்லா காலமானதைத்
தொடர்ந்து, அங்கு புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்ற ஆர்வம் அரசியல்
பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

 

அப்துல்லா சவுதியின் ஆறாவது மன்னராவார்.நிமோனியா காய்ச்சலால்
பாதிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் முதல் அவர் மருத்துவமனையில்
சிகிச்சை எடுத்து வந்தார்.

 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அசர் தொழுகையின் பின்னர் நடைபெற உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team