சவுதியின் மதினா நகரில் தீ விபத்து; 15 யாத்திரிகர்கள் பலி - Sri Lanka Muslim

சவுதியின் மதினா நகரில் தீ விபத்து; 15 யாத்திரிகர்கள் பலி

Contributors

 

சவுதி அரேபியாவின் மதினா நகரில் யாத்திரிகர்கள்  தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ வித்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

_72853498_72853497

மதீனா நகருக்கு சென்றிருந்த பல்வேறு நாட்டைச் சேர்ந்த யாத்திரிகர்களில் சுமார் 700 பேர் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

ஹோட்டலின் ஒருபகுதியில் ஏறபட்ட தீ சிறிது நேரத்தில் ஏனைய பகுதிகளிலும் பரவியதை அடுத்து அறைகளிலிருந்து வெளியே குதிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

index

விபத்து தொடர்பிலான தகவலையடுத்து மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

world-madinamunawwara-fireathotel_2-9-2014_137150_l

இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 130 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகளின்  எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.(nf)


Web Design by Srilanka Muslims Web Team