சவுதியில் எஜமானால் இம்சிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு 80,000 டாலர் நஷ்டஈடு - Sri Lanka Muslim

சவுதியில் எஜமானால் இம்சிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு 80,000 டாலர் நஷ்டஈடு

Contributors
author image

BBC

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது எஜமானால் இம்சிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 80,000 டாலார்கள் என்ற பெருந்தொகை நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

 

அவர் அங்கு பணியாற்றிய 7 வருட காலத்தில் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டதால், அவரது உடல் நிரந்தரமாக உருக்குலைந்து போயிருக்கிறது.

 

மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகே அவர் அனாதையாக வீசப்பட்டு கிடந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

 

அதனையடுத்து ரியாத்தில் உள்ள இந்தோனேசிய தூதரகத்துக்கு அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

 

அவரது முன்னாள் எஜமானருக்கு எதிராக வழக்கை தொடுப்பதற்கு இந்தோனேசிய தூதரகம் முயற்சித்தது.

 

ஆனால், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team