சவுதியில் கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய 3 இந்தியர்கள் கைது - Sri Lanka Muslim

சவுதியில் கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய 3 இந்தியர்கள் கைது

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் கள்ளச்சாராயாம் காய்ச்சிய 3 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஹெய்ல் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்திய போலீசார், அந்த வீட்டினுள் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிற்சாலை நடந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

வீட்டினுள் பேரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிச்சாராயம் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டுவந்த இயந்திரங்கள் மற்றும் ஏராளமான பணத்தையும் கைப்பற்றிய போலீசார், இந்த தொழிற்சாலையை நடத்திவந்த 3 இந்தியர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team