சவுதியில் கார் ஓட்டிய பெண்கள் விடுதலை - Sri Lanka Muslim

சவுதியில் கார் ஓட்டிய பெண்கள் விடுதலை

Contributors
author image

World News Editorial Team

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய இரண்டு பெண்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 
சவுதியில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதனை எதிர்த்து அந்நாட்டு பெண் அமைப்பினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, பெண்கள் கார் ஓட்ட சவுதி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஓட்டுநர் உரிமம் பெற்ற லுஜெயின் அல்–ஹதிபோல் (Loujain al-Hathloul Age-25) மற்றும் மேசா அல்–அமோய்டி (Maysaa Alamoudi) ஆகிய 2 பெண்கள் கார் ஓட்டிய போது கைது செய்யப்பட்டனர்.

 

சுமார் 73 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team