சவுதியில் வீதி சிவப்பு விளக்கு தொடர்பில் . புதிய சட்டம் அமுல். - Sri Lanka Muslim

சவுதியில் வீதி சிவப்பு விளக்கு தொடர்பில் . புதிய சட்டம் அமுல்.

Contributors

சவூதிஅரேபிய உள்துறை அமைச்சகம் நேற்று (01) முதல் போக்குவரத்து விதிமுறைகளில் கடுமையான சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

 

இதுவரை இல்லாதவகையில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்கும் பொருத்தமானவகையில் இயற்றப்பட்டுள்ளது.

 

சவூதியில் நாளொன்றுக்கு வீதி ஒழுங்கு முறைகளை மீறிநூற்றுக்கணக்கான வீதிவிபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அதில் 90% வீதமானவை உயிரிழப்பிலேயே முடிகின்றது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இனிமேல் வீதி சமிக்கை சிவப்புவிளக்குகளை மீறுவோர் கொலைக்குற்றவாளிகளாக கருதப்படுவர்.

 

மீறுபவர் உள்நாட்டவராக இருந்தால் சிறைத்தண்டனையும், வெளிநாட்டினராக இருந்தால் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது வீதி சமிக்கைகளை அனுசரித்து நடப்பதுடன், வீதியில் எந்தவிதவாகனமும் இல்லாத இடத்தில் தாங்களே தங்களுடைய வாகனத்தை சரியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

இவற்றை மீறி ஏதாவது உயிரிழப்புகளை ஏற்ப்படுத்தினால் கொலைக் குற்றம் சாட்டப்படுவதோடு அதற்க்கு தகுந்ததண்டனையும் வழங்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team