சவுதியில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் தங்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை அறிமுகம் - Sri Lanka Muslim

சவுதியில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் தங்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை அறிமுகம்

Contributors

சவுதியில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் தங்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 

அடுத்து வாரம் முதல் இது அமுலுக்கு வரவுள்ளதாக சவுதிக்கான இலங்கையர் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

சவுதியில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் துன்புறுத்தல்கள், வேதனம் வழங்கப்படாமை, தொழிலாளர் உரிமை மீறப்படுகின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

 

அவ்வாறு தாங்கள் முகம் கொடுக்கின்ற சவுதியில் உள்ள இலங்கை பணியாளர்கள் அடுத்த வாரம் முதல், 800 11 800 50 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team