சவுதியில் பல இலங்கையர்கள் நிர்க்கதி ஐ.தே.க - Sri Lanka Muslim

சவுதியில் பல இலங்கையர்கள் நிர்க்கதி ஐ.தே.க

Contributors

நாடு திரும்புவதற்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளாத சுமார் 300க்கும் அதிகமாக இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சவுதி அரேபியாவின் ஜித்தா – சுமேய் முகாமிலேயே குறித்த இலங்கையர்கள் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இது தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் அது தொடர்பில் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை என்று திஸ்ச அத்தநாயக்க அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team