சவுதியில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நால்வருக்கு 52 வருட சிறையும் 7000 கசையடியும் - Sri Lanka Muslim

சவுதியில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நால்வருக்கு 52 வருட சிறையும் 7000 கசையடியும்

Contributors
author image

Editorial Team

சவுதியில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு மொத்தமாக 52 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது கணவன் மற்றும் இளம் பெண் பிள்ளையின் முன்னே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்து கணவரை கட்டி வைத்துவிட்டு இக்குற்றம் புரியப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் சூடான் நாட்டவர் ஒருவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு மொத்தமாக 7000 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் முதல் குற்றவாளியான 17 வயது சவுதி நாட்டவருக்கு 17 வருட சிறையும் , 2500 கசையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மற்றும் 2 மற்றும் 3 ஆம் குற்றவாளிக்கும் தலா 15 வருட சிறையும் , 1500 கசையடி வீதமும் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆம் குற்றவாளிக்கு 5 வருட சிறையும் 1500 கசையடித்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team