சவுதியில் போதைப்பொருள் கடத்திய நபருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை - Sri Lanka Muslim

சவுதியில் போதைப்பொருள் கடத்திய நபருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை

Contributors
author image

World News Editorial Team

சவுதியில் போதைப்பொருள் கடத்திய நபருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சவுதியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கள்ள தொடர்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம்.

 

இந்நிலையில் சவுதியில் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீஸ் விஃபாக் ரசூல் ஷா(Hafiz Wifaq Rasoul Shah) என்ற நபர், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, நேற்று மதினா(Medina) நகரில் வைத்து தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இதே போன்று கொலை குற்றம் செய்த இந்தியர் ஒருவருக்கும் தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team