சவுதியில் மூதூர் சகோதரி மஹ்ரூப் ஹிதாயாவுக்கு நடந்த கதி - Sri Lanka Muslim

சவுதியில் மூதூர் சகோதரி மஹ்ரூப் ஹிதாயாவுக்கு நடந்த கதி

Contributors
author image

Editorial Team

 

சவூதி அரேபியாவில் வீட்டுப்பணிபெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கையின் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த அக்பர் மஹ்ரூப் ஹிதாயா என்ற பெண்மணி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர்(இருபது நாட்கள்) விபத்துக்குள்ளாகி இரண்டு கால் எலும்புகளும் முறிந்த நிலையில் மதீனாவில் உள்ள மன்னர் பஹாத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறித்த பெண்மணி விபத்துக்குள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது அங்கு சென்ற இலங்கை சகோதரர் ஒருவர் இது தொடர்பாக மூதூரைச் சேர்ந்த அங்கு தொழில் புரியும் அப்துல் வாஹித் அம்ஜத் எனும் சகோதரருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அவர் இது தொடர்பாக சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.

 

விபத்துக்குள்ளாகியுள்ள பெண்மணியின் இலங்கை விபரம் கடவுசீட்டு விபரம் போன்றவற்றினை கொண்டுவருமாறு மூதுரை சேர்ந்த அங்கு தொழில் புரியும் அப்துல் வாஹித் அம்ஜதிடம் இலங்கை துவராலய அதிகாரிகள் கோரியுள்ளனர்.

 

அப்போது குறித்த பெண்மணி தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லாத பட்சத்தில் சமூக வலைத்தளம் ஊடாக குறித்த பெண்மணியின் தகவல்களை திரட்டி சுமார் மூன்று தினங்களுக்கு பின்னர் கடந்த ஐந்தாம் திகதி இலங்கை தூதுவராலயத்தில் குறித்த பெண்மணியின் விபரங்களையும் கடவுசீட்டு விபரங்களையும் கையளித்துள்ளார் மூதூர் சகோதரர் அப்துல் வாஹித் அம்ஜத்.

 

குறித்த விபரங்களை அப்துல் வாஹித் அம்சத் இலங்கை தூதுவாராலயத்துக்கு கையளித்து சுமார் ஒருவாரகாலம் ஆகியும் இலங்கை தூதுவராலய அதிகாரிகள் எவரும் விபத்துக்குள்ளாகியுள்ள அந்த பெண்மணியை சென்று இதுவரை பார்க்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

 

இது தொடர்பாக ஜித்தாவில் உள்ள இலங்கை தூதுவர் காரியலத்திற்கு சகோதரர் அப்துல் வாஹித் அம்சத் நேரடியாக சென்று அதிகாரிகள் எவரும் சென்று குறித்த பெண்மணியை இதுவரை ஏன் பார்க்கவில்லை என வினவிய போது இவ்விடயம் தொடர்பாக அணுகும் அதிகாரி விடுமுறையில் இலங்கை சென்றுவிட்டதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக ஜித்தா இலங்கை தூதுவராலயத்தை தொடர்ப்புகொண்டு வினவியபோது இவ்விடயங்கள் தொடர்பாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அதிகாரி குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு பின்னரே அதாவது கடந்த பத்தாம் திகதியே இலங்கைக்கு விடுமுறையில் வந்துள்ளார்.

 

மனிதர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்ட இந்த காலகட்டத்தில் இரு கால் எலும்புகள் முறிந்து படுக்கையில் கிடக்கும் மூதூர் பெண்மணி விடயத்தில் இலங்கை தூதுவர் காரியாலய அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளவது சர்வ சாதராணமான விடயம்தான் என்றாலும்….

 

இவ்விடயம் தொடர்பாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரி சலீம் அவர்களை தொடர்ப்பு கொண்டு வினவியபோது இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கும் பொறிமுறை ஒன்று உள்ளதாகவும் அது தொடர்பான பூரண விளக்கத்தையும் எமக்கு அளித்தார்.

 

இந்த சம்பவத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட பெண்மணியின் மருத்துவ நடவடிக்கைகளுக்காகவும் அமைச்சர் தாளத அத்துகோரள அவர்களிடத்தில் நேரடியாக முறையிடுவதற்காக விபத்துக்குள்ளான பெண்மணியின் கடவுசீட்டு விபரங்களை சவுதியில் இருக்கும் மூதூர் சகோதரர் அப்துல் வாஹித் அம்சத் உறுதிப் படுத்தினார். (J)

Mutur 2Mutur

Web Design by Srilanka Muslims Web Team