சவுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி - Sri Lanka Muslim

சவுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி

Contributors
author image

World News Editorial Team

சவுதியில் வாட்ஸ் ஆப் மூலம் நபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் மூலம் நபர் ஒருவரை பற்றி அவதூறு செய்தி பரப்பிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டது.

 

இவ்வழக்கின் முடிவில் அவருக்கு 20,000 சவுதி ரியால் (5,332 டொலர்கள்) மற்றும் 70 சவுக்கடிகள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை பொலிசார் தெரிவிக்கவில்லை.

 

இந்நிலையில் சவுதி சைபர் கிரைம்(Cyber Crime)சட்டத்தின் படி ஒருவரை அவமானப்படுத்துதல் அல்லது பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி மற்றவர்களை பற்றி அவதூறு பரப்புதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 500,000 சவுதி ரியால் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team