சவுதி அரேபியவில் வினோத சுற்றுலா - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் சவுதி அரபியாவின் அல் கப்ஜி தஃவா நிலையம் 17-04-2015 அன்று ஏற்பாடு செய்த வினோத சுற்றுலா மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் தமிழ் மற்றும் சிங்களம் போசக் கூடிய எறாளமான மக்கள் பங்கு கொண்டு தங்களுக்குள் அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தினர். 

 

கையிரு இலுத்தல், சாக்கோட்டம், கனா முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், பலூன் உடைத்தல், தேசிக்காய் ஒட்டம், மாவு ஊதி காசு எடுத்தல், தயிரு ஊட்டுதல் என பல விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்று இறுதியில் அல் கப்ஜி தஃவா நிலைய தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு பொருப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்களின் சிங்கள மொழி மூலமான உரை இடம் பெற்றது. 
அதில் அவர் சவுதி அரேபியவில் உள்ள இஸ்லாமிய நிலயங்களின் பணிகள் மற்றும் இஸ்ஸாமிய மார்கத்தை மாற்று மத நண்பர்களுக்கு எந்த விதமான அழுத்தங்களுக்கும் அப்பால் நாம் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இனங்களுக்கு மத்தியல் சக வாழ்வு என்பதனையும் இஸ்லாமிய மார்கம் மாற்று மத அன்பர்களோடு எந்த அளவு மனித நேயத்துடன் நடந்து கொள்கின்றது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.  
மேலும் இந்நிகழ்வில் மாற்று மத அன்பர்களான அதுல பண்டார, ரவி மற்றும் தமாம் நகரில் வசிக்கும் சகோதரர் ரொஷான் ஆகியோர் சிங்கள மொழி மூலம் உரை நிகழ்த்தினர். ஈட்ரில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மற்றும் இரப் போசனம் பரிமாறப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
 விளையாட்டு நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்சி அடைகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளை பொருந்திக் கொள்வானாக!

தகவல்: அபூ தர்வேஷ்
 sa2 sa2.jpg2 sa2.jpg2.jpg4 sa2.jpg2.jpg4.jpg7
sa2.jpg5

Web Design by Srilanka Muslims Web Team