சவுதி அரேபியாவின் கொபார் பிரதேசத்தில் இலங்கை தூதரக பாடசாலையை நிறுவ முயற்ச்சி! - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவின் கொபார் பிரதேசத்தில் இலங்கை தூதரக பாடசாலையை நிறுவ முயற்ச்சி!

Contributors

சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியமான தம்மாம், கொபார் பிரதேசத்தில் பெற்றோருடன் வாழும் சுமார் 600 குழந்தைகள் பயன்பெரும் வகையில் இலங்கை தூதரக பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்ச்சிகள் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத‌ன் அடிப்ப‌டையில், எங்க‌ள் பிர‌தேச‌மான‌ த‌ம்மாம், கொபார் ப‌குதிக‌ளில் எங்க‌ள‌து செயற்பாடுக‌ளை விரிவாக்குவ‌த‌ற்கு ஆக்க‌ பூர்வ‌மான‌ ஆலோச‌னைக‌ள் இட‌ம் பெற்று வ‌ருகின்ற‌ன.
இப்பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து பெற்றோர்களையும் ஒன்று சேர்த்து ஒரு  ஆரோக்கியமான் ஆரம்ப கலந்துரையாடலொன்றை நடத்துவதற்முயற்சிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு சில இளைஞர்கள் தற்க்காலிகக் குழுவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு உதவும் வகையில், தாங்கள் தம்மாம்/கொபார் பிரதேசத்தில் வசிப்பவராக இருந்தால் உங்களுடைய பெயர்,  தொலைபேசி இலக்கம்  மற்றும் உங்கள் குழந்தைகளின் விபரம்(எண்ணிக்கை, வயது, பால்) போன்றவற்றை எங்களது மின்னஞ்ஞல் முகவரிக்கோ அல்லது கையடக்கத் தொலைபேசிக்கோ அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். அத்துடன் உங்களுக்கு தெரிந்தவர்கள் இப்பிரதேசத்தில் வாசிப்பவராக இருந்தாள் அவர்களுக்கும் இச்செய்தியை தெரியப்படுத்துவதுடன் முடியுமானவரை எங்களுடைய முயற்சிக்கு உதவ முன்வாருங்கள். 

Tel.+966 551913241
Thanks
 Saboor Adem
+966559687678

Web Design by Srilanka Muslims Web Team