சவுதி அரேபியாவின் பொருளாதார நெருக்கடியும் மீட்சிக்கான 20 பில்லியன் ரியால் முதலீடும்..! - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவின் பொருளாதார நெருக்கடியும் மீட்சிக்கான 20 பில்லியன் ரியால் முதலீடும்..!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

இதன் எதிரொலியாக இந்நாட்டு வணிக வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் போதிய நிதி இல்லாத காரணத்தால் பல வர்த்தக நிறுவனங்கள் முடங்கி விடும் அபாயம் நிலவுகிறது.

இப்பிரச்சனைகளைக் களையும் வகையில் சவுதி அரேபிய நாட்டின் மத்திய வங்கி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.!

சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்த காரணத்தினால் இந்நாட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக வங்கிகளிடமும் போதிய அளவிலான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக வணிக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைத் தாறுமாறாக உயர்த்தி வருகிறது.

ஏற்கனவே கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பாதிப்பின் மூலம் அதிகளவிலான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்திருக்கு சவுதி அரேபிய நாட்டு நிறுவனங்கள், நிதி உதவி அளிக்க வேண்டிய வணிக வங்கிகளும் அதிக வட்டியை விதிக்கத் துவங்கியுள்ளதால் ஒட்டுமொத்த வர்த்தகச் சந்தையே சரிவு பாதையை நோக்கிச் செல்ல துவங்கியுள்ளது.

இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே களைய வேண்டும் என முடிவு செய்த சவுதி அரேபிய நாட்டின் மத்திய வங்கி, இந்நாட்டின் வங்கிகளில் சுமார் 20 பில்லியன் ரியால் அதாவது 5.3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் நாணய சந்தையை ஈர்க்கும் விதிமாகப் புதிதாக இரண்டு முதலீட்டுத் திட்டத்தையும் அறிவிக்க முடிவு செய்துள்ளது.
வங்கிகளில் அரசு சார்பில் 20 பில்லியன் ரியால் முதலீடு செய்வதன் மூலம் நாட்டில் நிதிநிலை மேம்படும் என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்போகிறது என மத்திய வங்கி தெரிவிக்கவில்லை.

இதனுடன் 7- 28 நாள் கொண்ட முதலீட்டுப் பத்திரத்தையும் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தகம் கச்சா எண்ணெய். கடந்த சில மாதங்களாகச் சர்வதேச சந்தையில் இதன் விலை அதிகளவில் குறைந்து வங்கிகளில் டெப்பாசிட் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஜூன் மாதத்தில் சவுதி வங்கிகளில் டெப்பாசிட் அளவு சுமார் 3.3 சதவீதம் குறைந்துள்ளது.

அனைத்து வழிகளிலும் இருந்து நிதி வரவு குறைந்த காரணத்தினால் கடந்த 15 மாதங்களில் இந்நாட்டின் வங்கிகளில் வட்டி விகிதம் சுமார் 1.5 சதவீத அதிகரித்துள்ளது.

நாணய மதிப்பு, வர்த்தகச் சந்தை, நிதி நிலை, பணப்புழக்கம் ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இந்நாட்டு அரசு தொடர்ந்து போராடி வந்தனர். தற்போது இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை பிரச்சனையைக் களையவே இந்த 20 பில்லியன் ரியால் முதலீடு செய்வதை இறுதிக்கட்ட முடிவாக மத்திய வங்கி ஏற்றுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team