சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண்கள் முகாமில் தடுத்து வைப்பு - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண்கள் முகாமில் தடுத்து வைப்பு

Contributors

தொழிலுக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற சுமார் 150 இலங்கைப் பணிப்பெண்கள் ஜித்தாவிலுள்ள சுமேஷி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்ததால் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மற்றும் தூதரக அதிகாரிகளிடம் தஞ்சமடைந்த பணிப்பெண்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

எவ்வாறாயினும் சுமேஷி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாம் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அசௌகரியத்தை எதிர்நோக்கிவருவதாக இலங்கையின் பணிப்பெண்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

 

இது தொடர்பில் ஜித்தாவிலுள்ள கொன்சியுலர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் எம்.பி.எம்.சரூக்கிடம் வினவியபோது, குறித்த பணிப் பெண்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை  முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

 

அவர்களுக்கு தேவையான தற்காலிக கடவுச் சீட்டுகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team