சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிவிப்பு! - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிவிப்பு!

Contributors

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக இன்னும் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்காக அரசு வழங்கியிருந்த பொது மன்னிப்புக் காலம் நவம்பர் மாதம் 3ம் திகதியோடு முடிவடைவதாக ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரசாங்க வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டிருந்த  சசுற்று நிருபத்தின்படி 2013 ஏப்ரல் மாதம் 6ம் திகதி முதல் இரண்டாவது தடவையாகவும் நீடிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் நவம்பர் 3ம் திகதியுடன் முடிவடைவதாகவும், எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்காதெனவும் சட்ட விரோதமாக இன்னும் தங்கியுள்ளவர்கள் தேவையான ஆவணங்களை ஒப்படைத்து ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளுமாறு அல்லது  நாட்டை விட்டு வெளியேறுமாரும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team