சவுதி அரேபியாவில் ஐந்து பேர் துல் ஹஜ் பிறை கண்டதாக தகவல்! சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் ஐந்து பேர் துல் ஹஜ் பிறை கண்டதாக தகவல்! சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

Contributors
author image

Furkan Careem

சவுதி அரேபியாவில் ஐந்து பேர் துல் ஹஜ் பிறையைக் கண்டதாக சபக் இணையம், அல் ரியாத் இணைய செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இன்று  வியாழன் துல் ஹஜ் பிறை ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி வெள்ளிக் கிழமை அரபா தினம் மற்றும் மறுநாள் ஒக்டோபர் 4ஆம் திகதி சனிக் கிழமை ஈதுல் பித்ர் பெருநாள்.

 

அல்லாஹ்வால் புனிதப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தை அடைந்து கொண்ட நாம் இம் மாதத்தின் முதல் ஒன்பது நாற்களும் நோன்பு இருக்க முயற்சிப்போம்.

 

மேலும் அதிகமதிகமாக அல்லாஹ்வை துதித்து அவனது ஞபகத்தோடு உபரியான தொழுகைகளிலும் அதிகம் கவணம் செலுத்துவோம்.

 

குறிப்பாக அல்லாஹ்வின் புனித வேதமாகிய அல்குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்வோம்.

 

மேலும் துல் ஹஜ் ஒன்பதாவது நாள் அதாவது அரபா நாளில் கட்டாயமாக (ஹஜ்ஜூக்கு செல்லாத மக்கள்) நோன்பு வைத்து ஒரு வருடம் முன் செய்த பாவங்களையும் எதிர்வரும் ஒரு வருடம் செய்ய இருக்கும் பாவத்தையும் போக்கிக் கொள்ள முயற்சிப்போம்.

 

As- Sheikh M.Riskhan Musteen (Salafy/Madani)
Cooperative Office for Call and Guidance in Al Khafji
Sinhala And Tamil Division,
P.o Box: 158, Zip Code: 31971
Al Khafji, KSA.
Tel: 0137667969 Ext 108

Web Design by Srilanka Muslims Web Team